Header Ads



விஜயகலாவின் ராஜாங்க அமைச்சை, பறிக்க வேண்டும் - ஜனாதிபதியிடம் கோரிக்கை

விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு - கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை மீண்டும் ஓங்கவேண்டும் என யாழில் பகிரங்க இடத்தில் இவ்வருட நடுப்பகுதியில் விஜயகலா மகேஸ்வரன் பேசியிருந்தார். இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தோம்.

அதையடுத்து, தான் வகித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சுப் பதவியை விஜயகலா இராஜிநாமா செய்திருந்தார்.

புலிகளை ஆதரித்தமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

எனினும், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ரணில் அரசின் தீர்மானத்துக்கமைய மீண்டும் அவருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார். இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. அவருக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவி ஜனாதிபதியால் மீளப்பெறப்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் அவர் இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜிநாமாச் செய்யும் நிலைமையை நாம் ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. What about MR government was Keeping KARUNA with them?

    ReplyDelete
  2. விஜயகலா தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு பெண். இவர் சிறையில் இருக்க வேண்டியவர். இவருக்கு அமைச்சு பதவி வழங்கி அழகு பார்க்கின்றது மொக்கு ஐ தே க

    ReplyDelete
  3. She didn´t wrong let her continue peacefully duty.

    ReplyDelete
  4. Info X , why are you so jealous? I suggest to give this post also to Rishad.

    ReplyDelete
  5. @Cruso can u show me an evidence that rishad supported any terrorist group in srilanka or in other countries?

    ReplyDelete
  6. விஜயகலா மகேஸ்வரன் அவர்கள், யாழ்பாணத்தில் புலிகளின் கட்டுப்பாடு
    இருந்தபோது காடையர்களின் அடாவடித்தனங்கள் இல்லாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
    அச்சமின்றி இருந்ததை தற்போதய
    சூழ்நிலையில் ஒப்பீடு செய்து மக்களும்
    அவ்வாறான ஒரு நிலமையை விரும்புகின்ற நிலமைக்கு தள்ளப்படுகிறார்கள் எனவே அரசும்
    பாதுகாப்பு பிரிவும் இதுவிடயத்தில்
    கவனம் செலித்தி யாழ்பாணத்தில்
    சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துமாறு
    கேட்பதென்ற கருத்துப்படவே மக்கள்
    பிரதிநிதி என்ற வகையில் அவரது
    உரை இருந்ததாக கட்சி பேதமற்ற
    இன மத பிரதேச வேறுபாடற்ற ஆனால்
    பயங்கர வாதம் இந்த நாட்டிலே முற்றாக
    ஒழிக்கப்படவேண்டும் என்று நினைக்கின்றவர்களின் கருத்தாகும்.
    எனவே அரசியல்வாதிகள் இதற்கு
    வேறுவடிவம் கொடுப்பதற்கு விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றி
    விட்டார் என்பதுதான் கவலைக்குரிய
    விடயமாகும். அதிலும் விமல் வீரவன்ச
    போன்றவர்களுடைய கற்பனை கணிப்பீடுகளை உலகம் அறியும்.

    ReplyDelete

Powered by Blogger.