Header Ads



ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்து, எதிரிகளின் தந்திரங்களில் சிக்க எமது அணி தயாரில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடங்கலாக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணியின் சார்பில் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்ற முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

வேறு அரசியல் கட்சிகள் போன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்து, எதிரிகளின் தந்திரங்களில் சிக்க தமது அணி தயார் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு, டாலி வீதியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.