ஜனாதிபதி இடமளிக்காவிட்டால், கடும் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும்
நீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் இன்று -11- இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நீதியான முறையில் செயற்பட்டுவந்த அரசாங்கத்தில் பிரச்சினையை உருவாக்கி சட்டவிரோத அரசாங்கமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உருவாக்கினார். ஆகவே அவரே இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
அவ்வாறே பெரும்பன்மையின் விருப்புக்கு ஏற்ப செயற்பட்டால் மாத்திரமே இந்த பிரச்சினையை விரைவில் மாற்றியமைக்க முடியும். பெரும்பான்மைக்கும் ஜனாதிபதி இடமளிக்காவிட்டால் மக்களின் கடும் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment