மகிந்த என்னை சிறையில் அடைத்தபின், மன்னிப்பு கேட்டால் விடுவிப்பதாக கூறினார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்னைச் சிறையில் அடைத்த போதும், அவரிடம் மன்னிப்புக் கேட்டால் என்னை விடுவிப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.
எனினும், நான் அதனை மறுத்து விட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மாவனல்லை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா இதனைக் கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஒரு சாதாரண மன்னிப்புக்காக, நான் பல மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசப்பட்டேன். எனினும் நான் என்னுடைய நிலையிலிருந்து ஒருபோதும் மாறவில்லை.
அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டார். அதற்கு உடன்படவில்லை
ஓர் அமைச்சுப் பதவிக்காக மன்னிப்புக் கோருவேன் என்று எதிர்பாரக்கிறீர்களா” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment