ஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தீர்ப்பொன்றை உடனடியாக வழங்குமாறு உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி வழங்கியுள்ள கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறியினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தீர்ப்பொன்றை உடனடியாக வழங்குமாறு சட்டமா அதிபரின் ஊடாக ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்ததாக மனுதாரரான சட்டத்தரணி அருண லக்சிறி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கோரிக்கைகளின் மூலம் குறித்த வழக்கு விசாரணைகளை ஒழுங்கான முறையில் தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே குறித்த வழக்கு தொடர்பில் சுயாதீனமாக விசாரணை செய்து சரியான தீர்பு ஒன்றை வழங்குமாறு அவர் உயர் நீதிமன்றத்திடம் வேண்டியுள்ளார்.
The country is leading toward complex structure of troubles every day.
ReplyDeleteWe Ask Allah to solve the problems and make this land a good peaceful place for his slaves to live and worship him alone without any trouble.