Header Ads



நான் தற்போது, வேலையற்ற பிரதமர் - மகிந்த

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய தான் தற்போது வேலையற்ற பிரதமர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க கூடிய நிலையில், இருந்தும் அதனை தவிர்த்தது. இதனை மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் பல்வேறு வரி விதிப்புகளால் பல கஷ்டங்களை அனுபவித்தனர்.

நான் பிரதமராக பதவியேற்றதும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினேன். அந்த வேலைத்திட்டத்தை சிலர் ஊடக கண்காட்சி என வர்ணிக்க முயற்சித்தனர்.

நாட்டில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றமே காணப்படுகிறது. அங்கு நடக்கும் கூட்டங்களில் கலந்துக்கொள்வது பலனளிக்காது. ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லை.

ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்குமா என்பதை பார்ப்போம். ரணில் பிரதமர் பதவியை மக்கள் காப்பாற்றி கொடுப்பார்களா என்பதை மக்களிடம் சென்று கண்டறிய முடியும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சினைக்கு மிகச்சுலபமாக தீர்வு கண்டிருக்கலாம் எனவும் இந்த பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட்டிருப்பதே சிக்கலாகியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஒரு தேவையற்ற பிரதமர்

    ReplyDelete

Powered by Blogger.