ரணிலின் பலம், என்ன தெரியுமா..? கோத்தாபய சொல்வதைக் கேளுங்கள்
மக்களால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இன்று தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத அளவிற்கு சர்வதேச அழுத்தம் எழுந்துள்ளது, தூதரகங்களின் உதவியுடனும், புலம்பெயர் புலி அமைப்புகளின் உதவியுடனும் தன்னை பிரதமராக நியமிக்க ரணில் அழுத்தம் கொடுக்கின்றனர். இதுவே ரணிலின் பலம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன் புதிய அரசியல் அமைப்பினை கொண்டுவந்து வடக்கு கிழக்கினை இணைக்க தமிழ் தரப்பு சந்தர்ப்பம் பார்த்து காத்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மொரட்டுவ பிரதேசத்தில் எளிய அமைப்பினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment