Header Ads



ஐக்கிய தேசிய கட்சியினுள், நெருக்கடி நிலை - பொது தேர்தல் நடத்தால் பாரிய பிளவு

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சியினுள் நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதப்புரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஆட்சி அமைப்பதற்கு முழு வீச்சுடன் செயல்பட்டோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில், பல்வேறு தரப்பினருக்கு இடையிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், பொது தேர்தல் ஒன்றை விரைவில் நடத்தாத பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் பாரிய பிளவுகள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.