"ஹமாஸ்" க்கு கண்டனம் தெரிவிப்பதை, தவிர்த்துக்கொண்ட இலங்கை
ஐக்கிய நாடுகள் பொது சபையில் பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் இலங்கை நடுநிலைவகித்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் பொது சபையில் அமெரிக்கா கொண்டு வந்திருந்த நிலையில், அதற்கு போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 86 நாடுகளும், எதிராக 57 நாடுகளும் வாக்களித்தன. எனினும், இந்தியா, இலங்கை உள்ளிட்ட 33 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன.
இதன் காரணமாக குறித்த பிரேரணைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லாததால் தோல்வியடைந்தது.
பலஸ்தீனத்தை நட்பு நாடு என இலங்கை கொண்டாடும் நிலையில் குறித்த தீர்மானத்துக்கு எதிராக இலங்கை வாக்களிக்காமல் நடுநிலைவகித்துள்ளது.
Bad decision
ReplyDeleteபுலி பயங்கரவாதிகளையும் ஹமாஸ் போராளிகளையும் ஒரே தட்டில் வைத்துபார்க்க முடியாதென்பதை உலகிற்கு இலங்கை ஒரு சிறிய செய்தியை கூறியுள்ளது. Weldone
ReplyDelete