Header Ads



"பிள்ளைகள் உள்ள தந்தையரினால்தான், பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும்"

பிள்ளைகள் உள்ள அப்பாக்களுக்குத்தான் தெரியும் மக்களின் பிரச்சினைகள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மித்தெனிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 

நாம் சிறிய பௌத்த பிக்குகளுக்கு பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

அது தமிழாக இருக்கலாம், ஆங்கிலமாக இருக்கலாம் அல்லது பிரெஞ்சு மொழியாகக் கூட இருக்கலாம்.

மொழிக் கல்வியை கட்டாய பாடமாக அறிவித்து சிறிய பௌத்த பிக்குகளுக்கு அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.

மொழிகளை கற்றுக் கொடுப்பதன் மூலம் பௌத்த மதத்தை விஸ்தரிக்க முடியும் என்பதுடன், மரித்துப் போகும் மொழிகளில் ஒன்றாகவே சிங்கள மொழி காணப்படுகின்றது.

பௌத்த மதத்தின் ஊடாகவே சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

பிள்ளைகள் உள்ள தந்தையரினால் தான் நாட்டு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடியும், அதனையும் நான் நினைவுபடுத்துகின்றேன்.

கடந்த காலங்களில் மிகவும் மோசமான முறையில் எவ்வித கேள்வியும் இன்றி வரி அறவீடு செய்யப்பட்டது.

இதனால் மக்களினால் வாழ்க்கையை கொண்டு நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. மிளகு இறக்குமதி செய்யப்பட்டு இலங்கை மிளகுடன் கலந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இதனால் மிளகின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எமது ஆட்சிக் காலத்தில் மிளகு விற்பனை தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்திருந்தது.

எனினும் இந்த அரசாங்கத்திடம் அவ்வாறான திட்டங்கள் எதுவும் கிடையாது, இந்த அரசாங்கம் விவசாயம் பற்றி எவ்வித முன்னுரிமையையும் வழங்குவதில்லை.

வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டை அராசங்கம் கொண்டுள்ளது, எனினும் நாம் அதற்கு நேர் எதிரான கொள்கைகளை பின்பற்றுகின்றோம் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Hahaha well said Mr. MR
    The parents know what their children do wrong and right too, is it?
    So, you and My3 dont have political fight against to the current government, started to dig their family matters????
    Shame Shame...

    ReplyDelete
  2. MAHINDA HAVE YOU EVER THOUGH OF THE PLIGHT OF PARENTS OF THAJUDEEN AND EKALINAGODA AND LASANTHA-SATHHAN VEEDAM ODUGERTHU.

    ReplyDelete

Powered by Blogger.