Header Ads



"பிச்சை வேண்டாம், நாயைப்பிடி என்ற நிலையில் இருக்கின்றோம்"

இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தன் ஐயாவையே சாரும் என தமிழரசுக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடையும்போது முதலாவது பாதிக்கப்படுவது தமிழ் மக்களாகவே இருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாங்கள் பல தடவைகளில் பிச்சை வேண்டாம். நாயைப்பிடி என்ற நிலையில் செயற்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது. அதனையே நாங்கள் செய்துள்ளோம்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டுவரப்பட்ட சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு மேலும் அதிகாரம் வேண்டும் என்று 18வது திருத்த சட்டத்தின் மூலம் அதனை நிறைவேற்றினார். அன்று அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பியான பியசேன என்பவரும் விலைபோயிருந்தார்.

இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்றை ஏற்படுத்தி குடியரசு ஆட்சியை முடியரசாக மாற்றும் செயற்பாடுகளில் மகிந்த ராஜபக்ஸ வெற்றியடைந்துவந்த காலப்பகுதியிலேயே இதனை அனுமதிக்க முடியாது.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் எழுந்துவந்தன. அந்த பயணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து கொண்டது.

அந்தகாலப்பகுதியிலேயே ஜனாதிபதிதேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே ஒருவரை பிரித்தெடுத்து அந்த கட்சியின் வாக்குகளையும் பிரிக்கச் செய்து மகிந்த ராஜபக்ஸவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பல விடயங்களை இணைந்துசெய்தோம்.

பொதுவேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன் பிரிந்துவந்து முதல் பொதுக்கூட்டத்தில் மூன்று வாக்குறுதிகளை வழங்கினார்.

ஜனாதிபதியானவுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையினை ஒழிப்பேன். பாராளுமன்ற தேர்தல் முறையினை மாற்றி தொகுதிக்கு பொறுப்புக்கூறுகின்ற உறுப்பினர்களை உருவாக்கும் நிலையினை உருவாக்குவேன். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பேன் என மூன்று வாக்குறுதிகளை வழங்கினார்.

தமிழ் மக்கள் இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகவுக்கு வாக்களித்தனர். அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். அவர்கள் இருவர் மீதும் இருந்த அன்பினால் வாக்களிக்கவில்லை.

மகிந்தராஜபக்ஸவை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே வாக்களித்தனர் என நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தெரிவித்திருந்தேன்.

எவரை வெளியேற்றவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களோ அவரை மீண்டும் பதவியில் கொண்டுவந்து அமர்த்தியதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று ஜனாதிபதியிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம்.

தென்னிலங்கையில் முற்போக்கு சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய கடமையினை செய்ததாக கூறுகின்றனர்.

இந்த நாட்டினை பாதுகாத்த பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கஉள்ளது என இன்று பலர் கூறுகின்றனர்.

இரண்டாவது தடவையாகவும் இந்த நாட்டின் ஆட்சி மகிந்த ராஜபக்ஸவின் கைகளுக்குள் சிக்குமாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது.அதனால் அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டிய ஒரு தேவையிருந்தது.

நாங்கள் இன்றும் நிதானமாக நடந்துகொள்வதற்கு தேவையிருக்கின்றது.இந்த அரசியல் சூழ்ச்சி இன்னும் இருக்கின்றது.அது எப்பவும் செயற்படமுடியும்.

அது ஜனாதிபதியின் நடத்தைகளிலேயே தெரிகின்றது. எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என மகிந்தராஜபகஸ அலைவதில் தெரிகின்றது. இது கடந்துபோன விடயம் என்று நாங்கள் இருக்கமுடியாது. மிகவும் அவதானமாக சிந்தித்து நடக்க வேண்டிய காலம் இன்னும் இருக்கின்றது.

தென்னலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான மதிப்பு வானுயர வளர்ந்திருக்கின்றது. இது அரசியலமைப்பு தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் கொண்டுசெல்கின்றபோது எங்கள் மீதுள்ள மதிப்பு புதிய அரசியலமைப்பினை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்றார்.

1 comment:

  1. SINCE OF LATE YOU ARE TALKING TOO MUCH.KINDLY LOOK AFTER YOUR OWN SECURITY.DO NOT UNDER ESTIMATE MAHINDAS NATURE OF TAKING REVENGE.YOU HAVE TO LEARN A LESION FROM WHAT HAPPENED TO PARARJASINGAM.

    ReplyDelete

Powered by Blogger.