Header Ads



அமைச்சு மறுக்கப்பட்டோர் ஜனாதிபதிக்கு, எதிராக நீதிமன்றம் செல்கின்றனர்

அமைச்சர் பதவியை வழங்காமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அமைய பாலித ரங்கே பண்டார தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் தனிப்பட்ட விரோதங்களுக்கு அமைய ஜனாதிபதி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக இருப்பதாகவும் கூறி இந்த வழக்கை தொடர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

அவரது அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பான தகவல்களை பாலித ரங்கே பண்டார பகிரங்கப்படுத்தினார். இதன் காரணமாக ஜனாதிபதி ரங்கே பண்டாரவுக்கு அமைச்சர் பதவியை வழங்கவில்லை.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட காரணங்களுக்காக தனது அமைச்சர் பதவியை வழங்காமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகேவும் நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. ஐம்பது நாட்களில் 950 டொலர் மில்லியன் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது:கபீர் ஹாசிம்.

    Who is responsible?

    ReplyDelete

Powered by Blogger.