தேர்தலுக்கு தயாராகும் மைத்திரிபால
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகள் தணிந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறார்.
தேர்தல் ஒன்றை இலக்கு வைத்து ஜனாதிபதி செயற்பாடுகள் அமைந்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் எதிர்கால வேலைத்திட்டம், மீளமைப்பு நடவடிக்கைகள் என்பன குறித்து ஆராயப்பட்டன.
கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு சகல தொகுதி அமைப்பாளர்களினதும் ஒத்தழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வலுப்படுத்தி எதிர்வரும் தேர்தல்களுக்காக அதனை தயார்படுத்த தொகுதி தலைமைத்துவங்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரிய கூட்டணியாக எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.
சுதந்திர கட்சி பிளவடைந்திருப்பதாக கூற ஐக்கிய தேசிய கட்சி முயன்று வருகிறது. இதனை நிராகரிப்பதாகவும் பேராசிரியர் ஹோரக லக்ஷமன் பியதாஸ கூறினார்.
Do not hide behind Pohottuwa
ReplyDelete