Header Ads



ஹரீசை வரவேற்கும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும்

நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை நகரின் வடக்கு பகுதியில் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன தெரு மின் விளக்கு தொகுதியின் அங்குரார்ப்பண வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் உயர்கல்வி, நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர், கே.கோடீஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையிலான மாநகர சபை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் விடுத்த வேண்டுகோளின் பேரில் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் மூலம் 10  மில்லியன் ரூபா நிதியை இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந்நிதியின் மூலமாக கல்முனை வெஸ்லி கல்லூரி தொடக்கம் தாளவட்டுவான் சந்தி வரையிலான நெடுஞ்சாலையில் நவீன தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, ஒளியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை வரவேற்கும் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளன.

கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.