Header Ads



தங்களுடன் இணையுமாறு, மங்களவை அழைத்த மகிந்த

மஹிந்த ராஜபக் ஷவிற்கு காலமே சரியில்லை, அவர் எந்த பதவிக்கு வந்தாலும் இன்னொருவர் போட்டிக்கு வந்துவிடுகின்றார்.மஹிந்த ராஜபக்ஷவை நினைகையில் பாவமாக உள்ளது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலகுவில் எவராலும் ஏமாற்ற முடியாத மஹிந்தவையே அண்மைக்காலமாக ஏமாற்றிவிட்டனர் என நினைக்கும் போது வேதனையாக  உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

 பாராளுமன்றத்தில் இன்று -21- வெள்ளிக்கிழமை நிதி அமைச்சர் மங்கள சமரவீர இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போது இந்த காரணிகளை முன்வைத்தார்.

அவர் தொடர்நதும் கருத்துரைக்கையில், 

மஹிந்த ராஜபக்ஷ யாரிடமும் இலகுவாக ஏமாற்றக்கூடிய நபர் அல்ல, அவரை யாரும் ஏமாற்ற முடியாது. ஆனால் கடந்த அரசியல் சூழ்ச்சியில் அவரையும் ஏமாற்றி விட்டனர். 

தெற்கின் எங்களின் நபர் ஒருவரை ஏமாற்றிவிட்டனர் என நினைக்கும் போது எனக்கும் கவலையாக உள்ளது. ஆனால் அவர் அப்பாவி அல்ல. கடந்த ஒக்டோபர்  மாதம் 26 ஆம் திகதி அவரை நான் பாராளுமன்ற சிற்றுண்டி சாலையில் சந்தித்து பேசியபோது எனது அரசாங்கத்தில் இணைந்துகொள்ள வாறீர்களா என என்னிடம் கேட்டார். இவர் வழமைபோல் பகல் கனவு காண்கின்றார் என்ற நினைப்பே  என் மனதில் இருந்தது. 

ஆனால் அன்று இரவு இரகசியமாக அவர் பிரதமாராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அப்போது தான் அவர் கூறியதன் அர்த்தம் எனக்கு விளங்கியது. ஆகவே அவர் அப்பாவி என நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் கடந்த அரசியல் சூழ்ச்சியில் அவருக்கும் பங்கு உள்ளது.

No comments

Powered by Blogger.