சு.க. அலுவலகம் மூடப்பட்டது - காரணம் என்ன...?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயம் மூடப்பட்டமைக்கு கட்சி உட்பூசல்கள் முரண்பாடுகள் எதுவும் காரணமில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயம் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளதாகவும், அதில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் நோக்கில் இவ்வாறு மூடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு தாய்லாந்துக்கு சென்றுள்ள நிலையில், அநேகமான சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கொழும்பை விட்டு வெளியே இருக்கின்றார்கள்.
கட்சியில் முக்கியமான விடயங்கள் எதுவும் தற்போதைக்கு முன்னெடுக்கப்படாது என்ற காரணத்தினால் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயம் மூடப்பட்டமை குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாக பிழையான பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் முரண்பாட்டு நிலைமை காரணமாக கட்சியின் அலுவலகம் மூடப்படவில்லை என ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
Post a Comment