ஐக்கிய தேசியக்கட்சிக்குள், யுத்தம் ஆரம்பமாகியுள்ளது
இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது அரசாங்கத்திற்கு 108 வாக்குகளே கிடைத்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கழித்தால், ஐக்கிய தேசியக்கட்சிக்கு 88 வாக்குகள் மட்டுமே கிடைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
88 உறுப்பினர்களின் ஆதரவுடன் 103 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த ராஜபக்சவிடம் அரசாங்கத்தை கையளிக்க வேண்டும் என நாட்டிலும் சட்டத்துறையிலும் பேசப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மத்தேகொடவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடக்கால கணக்கு அறிக்கைக்கு வாக்களிக்காதது சம்பந்தமாக விசாரணை நடத்தியதால், ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மற்றுமொரு யுத்தம் ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
mmm....ippudi ippudi solli solli unga kaalam.mudinjirum...antha smiloda iringa
ReplyDelete