Header Ads



2 முஸ்லிம்கள் உட்பட அடுத்தவாரம், மேலும் சில ராஜாங்க பிரதியமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்

புதிய அரசாங்கத்தின் மேலும் சில ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல்வாரத்தில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளனர்.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  இந்த தகவலை வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு வெளிநாடு செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியப் பின்னர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, 3 அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்களும், 17 ராஜாங்க மற்றும் 7 பிரதி அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர்.

19ம் திருத்தச் சட்டத்தின்படி தேசிய அரசாங்கம் இல்லாத சந்தர்ப்பத்தில் 40 உப அமைச்சர்களே நியமிக்கப்பட முடியும்.

இதன்படி இன்னும் 16 உப அமைச்சர்களை அரசாங்கத்தினால் நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.