ரணில் தரப்பு இன்று சந்தித்தவேளை, சீற்றத்துடன் பதிலளித்த சிறிசேன
தேவையேற்பட்டால் இலங்கையின் சட்டமொழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய கட்சி குழுவொன்றை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையின் காவல்துறையின் அதிகாரத்தை நான் பொறுப்பேற்ற பின்னர் என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரiகைள் சிறப்பாக இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விசாரiணைகள் உரிய விதத்தில் சட்டத்தின் அடிப்படையில் இடம்பெறவேண்டும் என நான் தெரிவித்து வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இவ்வேளை குறுக்கிட்ட அமைச்சர் ரஞ்சித்மத்து பண்டார நான் விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பேன் என தெரிவித்துள்ளார்
இதற்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள சிறிசேன முன்னைய அரசாங்கத்தின் போது விசாரiணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை சட்டமொழுங்கு அமைச்சிற்கு பதில் பிரதமர் அலுவலகமே விசாரணைகளை கையாண்டது என தெரிவித்துள்ளார்.
ரஞ்சித் மத்துபண்டாரவிடம் சீறிப்பாய்ந்த சிறிசேன முன்னரும் நீங்கள் இந்த சட்டமொழுங்கு அமைச்சராக பதவி வகித்தீர்கள் அப்போது உங்கள் வேலையை நீங்கள் செய்தீர்களா இல்லையே பிரதமர் அலுவலகமே அதனை செய்தது என தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் நான் தகுதிவாய்ந்த ஒருவரை அந்த பதவிக்கு நியமிப்பேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு அமைச்சு ஒழுங்காக எப்போதுமே செயட்பட்டது இல்லை. இலங்கை வரலாற்றில் சட்டம் ஒழுங்கு அப்பாவி பொது மக்கள் மீது மட்டுமே செயட்படுத்த படுகிறது. ஜனாதிபதி சட்டம் ஒழுங்கை கையில் வைத்து இருப்பது அவர் பாதிக்கப்பட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திட்காக. அம்பாறை , முஸ்லிம்கள் மீது செய்யப்பட Digana மற்றும் ஏனைய அராஜகங்கள் , அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள், எத்தனையோ தமிழ் சகோதரர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, தாஜூடீன் கொலை வழக்கு இவற்றுக்கு எல்லாம் எந்த தண்டனையும் இல்லை வெறுமனே கண்துடைப்புகளும் அறிக்கைகளும் மட்டும் வருகின்றன. ஒழுங்காக ஒன்றும் நடந்தபாடு இல்லை. இலங்கையின் நீதி துறையில் பொதுமக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.
ReplyDeleteஜனாதிபதியினுடைய கருத்தை பார்க்கும் பொது, ஒன்று மட்டும் கேட்க தோன்றுகின்றது.
" உங்களுக்கு வந்தால் இரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி யா?"