ஜனாதிபதியின் டபள் கேம் - சம்பிக்க குற்றச்சாட்டு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க ஜனாதிபதி மறுத்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்ட விஜயதாச ராஜபக்ச மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி அமைச்சு பதவியை வழங்கினார்.
தற்போது சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க மறுப்பது ஜனாதிபதியின் இரட்டை நிலைப்பாடா அல்லது புதிய நிலைப்பாடா என சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து அமைச்சராக பதவியேற்ற வசந்த சேனாநாயக்க பின்னர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment