Header Ads



பாராளுமன்றத்தில் ரணில், ஆற்றிய நன்றி உரை

வடக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரங்களை நாம் அறிவோம். நாம் உருவாக்க முயற்சிக்கும் அரசியல் அமைப்பில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம்.  தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டில்  இருந்து நாம் மாறவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர் சபையில் நன்றி உரை நிகழ்த்தியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் கூறியதானது, 

நாம் முன்னெடுக்கும் புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் ஒற்றை ஆட்சிக்குள் பிளவுபடாத, பிளவுபடுத்த முடியாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க தயாராக உள்ளோம். அந்த அர்ப்பணிப்புக்கு நாம் தயாராக உள்ளோம். 

அதில் மாகாணசபைகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம் அனைத்தும் எமது வேலைத்திட்டத்தில் உள்ளது. அதேபோல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் நகர்வுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம்.  இன்று நாம் அனைவரும் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாட்டில் நாம் செயற்படவில்லை.  மாறாக இலங்கையர் என்ற உணர்வுடன் ஜனநாயகத்தை, உரிமைகளை பாதுகாக்க நாம் செயற்பட்டு வருகின்றோம். யுத்தத்தின் பின்னர் இன்று நாம் தமிழ் மக்களுடன் கலந்துரையாடி சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் ஏற்றுகொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை அரசியல் அமைப்பின் மூலமாக பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் மாறமாட்டோம் எனக் குறிப்பிட்டார். 

3 comments:

  1. We fedup for him.Oh my god.

    ReplyDelete
  2. சம்பந்தனுக்கு ரணிலுக்குமிடையிலிருக்கும் ஒப்பந்தத்தில் வடகிழக்கு இணைப்பு பிரதானமானதாம் அதற்க்கு ரிஷாட், ஹக்கீமின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

    ReplyDelete
  3. RNL is good at politics and tricks too....

    So we do not know, what trick he will play later.

    ReplyDelete

Powered by Blogger.