கிழக்கு முஸ்லிம்களின் சிந்தனையில், மாற்றம் வரவில்லை - முபாறக் மௌலவி கவலை
மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியும் எவ்வாறு அரசியல் ரீதியில் முஸ்லிம்களின் நன்மதிப்பை பெறுவது என்பது பற்றி இன்னமும் முறையாக சிந்தித்ததாகவோ நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
இலங்கை முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்கள் தமிழ் மொழி பேசுவோர் என்பதால் தமிழ் ஊடகங்களையே நம்பியுள்ளனர். அவை தரும் செய்திகள் சரியா பிழையா என்பது பற்றி சரியாக பிரித்தறிவோர் மிகக்குறைவு. அத்துடன் சிந்தனா ரீதியில் முடிவெடுப்பதை விட உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உலகளாவிய முஸ்லிம்களின் பாரம்பரியமாக உள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான தமிழ் மொழி ஊடகங்கள் ஐ தே கவின் ஆதரவில் இருப்பதால் மஹிந்த ராஜபக்ஷ பற்றி மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றன. இதனை முறியடிக்கும் வகையில் தமிழ் மொழியிலான தமது செய்திகளை வெளிக்கொணர, அவற்றை கண்கானிக்க மஹிந்த தரப்பில் எவரும் இல்லை. முன்னர் அஸ்வர் ஹாஜி இருந்த போது நானும் அவரும் இணைந்து பல செய்திகளை வெளிக்கொணர்ந்தோம்.
தமிழ் ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றி மூன்று வருடங்களுக்கு முன் பெசில் ராஜபக்ஷவிடம் நான் நேரடியாக தெரிவித்த போது தாம் பேசிய உரைகள் தமிழ் ஊடகத்தில் வெளிவருவதாக திருப்திப்பட்டுக்கொண்டார். ஆனால் அவரது உரையை பிரசுரித்து விட்டு இன்னொரு பகுதியில் அவருக்கெதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது என்பதை அவர் தமிழ் மொழி தொடர்பற்றவர் என்பதால் அவரால் விளங்கிக்கொள்ளவில்லை.
அதே போல் மஹிந்த அணியுடன் நெருங்கியிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் தென் மாகாணத்தை சேர்ந்தோராகும். இவர்களில் பலருக்கு தமிழ் முறையாக தெரியாது.
அது மட்டுமல்லாமல் மஹிந்தவின் இணைப்பாளர்களாக உள்ளவர்களும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள். கிழக்கை சேர்ந்தோர் யாரும் இருப்பதாக வெளிப்படையில் தெரியவில்லை.
அத்துடன் தேர்தலில் வென்றதும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற வாக்குப்பலம் உள்ள கட்சிகள் பதவிக்கு ஆசைப்பட்டு தம்முடன் இணைவர் என்ற நம்பிக்கை மஹிந்த தரப்பிடம் உள்ளது. இது உண்மைதான். ஆனாலும் தேர்தலுக்கு முன்பே தம்மோடு நின்று சிறிய அளவில் வாக்குகளை பெறக்கூடிய சிறிய முஸ்லிம் கட்சிகளை பலப்படுத்த வேண்டும். இது இன்னமும் நடை பெறவில்லை. சிறிய கட்சிகளை மஹிந்த தரப்பு பலப்படுத்தினால் பெரிய கட்சிகள் வழிக்கு வரலாம்.
அது மட்டுமல்லாது தமக்கு சார்பான சாதாரண முஸ்லிம் சாதாரண கட்சிகளை அரசியல் ரீதியில் பலப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இந்த 4 வருடத்துள் முன்னெடுக்கப்படவே இல்லை. அதற்கான பல ஆலோசனைகளை நான் தெரிவித்தும் எதுவும் நடக்கவில்லை. தேர்தல் வந்தால் தமது பொது ஜன பெரமுனவில் முஸ்லிம்களை நேரடியாக இணைத்துக்கொள்வதன் மூலம் முஸ்லிம்களை தம் பக்கம் மாற்றலாம் என நினைத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தென்னிலங்கையை சேர்ந்த சில முஸ்லிம் அரசியல்வாதிகள் நேரடியாக கிழக்கு மாகாணத்துக்கு சென்றும் சரியான வெற்றி கிடைக்கவில்லை.
பொதுவாக கிழக்கு முஸ்லிம்கள் தனிக்கட்சி சிந்தனையிலேயே உள்ளனர். பெரும்பான்மை கட்சிகளுடன் நேரடியாக தொடர்பு வைக்குமளவு அவர்களின் சிந்தனையில் மாற்றம் வரவில்லை. காரணம் தலைமைகள் சிங்கள மொழி பேசுவோராக இருப்பதாலும் தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகள் தம்மை தமக்குரிய ஏறு ஏணியாக பாவித்து விட்டு ஓரம் கட்டிவிடுவார்கள் என்ற அச்சமுமாகும். கடந்த காலங்களிலும் அவ்வாறு முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
Mubarak Abdul Majeed moulavi
முபாறக் மௌலவி அவர்களே இங்கு
ReplyDeleteஉங்களுடைய கட்சியையும் உங்களையும் மகிந்த தரப்பினர் எவ்வாறு கைக்கொள்கின்றனர், எதிர்காலத்தில் எவ்வாறு உங்களையும்
உங்கள் கடசியையும் அவர்கள் அரவணைக்க வேண்டும் என்பதையும்
சொல்லாமல் சொல்கின்றீர்கள் என்பது
எமக்கு விளங்குகிறது. அதற்காக முஸ்லீம் சமூகத்தையும் குறிப்பாக
கிழக்கு தெற்கு முஸ்லீம்களையும் தமிழ் ஊடகங்களையும் காட்டிக்கொடுக்கின்ற
அல்லது வித்து பிழைக்கின்ற காரியங்களில் ஈடுபடவேண்டாம் என
தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உலகமுஸ்லிம்களின் பாரம்பரியம் பற்றி.....
ReplyDeleteNEENGA LUM MAHINDA MAADHIRI SIWAPPU COLOUR CODE DRESS PANNI IRUKKUREENGA.WELDON
ReplyDeleteIN ISLAM SIVAPPU COLOUR CODE AANGALUKKU THADAI.