Header Ads



படுகொலைச் சதி விசாரணை முடியும்வரை, சட்டம்ஒழுங்கு அமைச்சு ஐ.தே.க. க்கு வழங்கப்படாது

தன்னைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக நடக்கும் விசாரணை முடியும் வரை, சட்டம், ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வழங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஐதேக உயர்மட்ட வட்டாரங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

அடுத்த 20 நாட்களுக்குள் இந்த விசாரணைகள் முடிவடையும் என்றும்,  அது முடிந்த பின்னர் கூடிய விரைவில் சட்டம் ஒழுங்கு அமைச்சு தமது கைக்கு வரும் என்றும் ஐதேக வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே சட்டம் ஒழுங்கு அமைச்சை வைத்திருந்த ரஞ்சித் மத்தும பண்டாரவிடமே மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அவர் தற்போது, பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.