அடிப்படைவாத குழுவே, புத்தர் சிலையை உடைத்தது - சேதங்களை அரச செலவில் செய்துகொடுக்க தீர்மானம்
புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய அடிப்படைவாத குழுக்களில் பெரும்பாலானவர்கள் இதுவரையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துமாறு தான் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த அடிப்படைவாதக் குழு இந்துக்களின் மதஸ்தலத்துக்கும் சேதம் விளைவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த குழுவிலுள்ள எவருக்கும் எந்தவித சலுகையும் வழங்கப்படக் கூடாது என தான் குற்றப்புலனாய்வுத் திணைக்கள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினால் மதஸ்தலங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை அரச செலவில் செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment