மகிந்த அணி - மைத்திரி அணி விசேட சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை ஏற்படுத்தவுள்ளதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் இடையே இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதன் போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சி காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, நாளைய தினம் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டார்.
நாளை சந்திப்பில் நீதிமன்றத் தீர்ப்பின் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் அதற்கு ஏற்றால் போல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் ஆராயப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment