பிரபாகனின் ஆசை, மகிந்தவை கொலை செய்வதாக இருந்தது
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய ஆசைப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரபாகரனின் ஆசையை இப்போது நிறைவேற்றுவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாத்தறை - அகுரஸ்ஸ பகுதியில் இன்று -24- நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காப்பாற்றுவதற்கு இந்த மேற்குலக சக்திகள் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளன.
அன்று மேற்குலக நாடுகள் ஒன்று சேர்ந்து பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என போராடின. இதற்காக அமெரிக்காவின் கடற்படை மற்றும் விமானப்படை தயாராகவே இருந்தன.
எனினும், விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கில் முல்லைத்தீவை நோக்கி படையெடுக்க தைரியமாக முதுகெலும்புடன் தீர்மானம் எடுத்த ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச மட்டுமே.
அவ்வாறான ஒரு தலைவரே இன்று நாடு குறித்து நன்கு சிந்தித்து தனது பதவியை விட்டுக்கொடுத்துள்ளார். எனினும், மகிந்தவை நாடாளுமன்றில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்று பிரபாகரன் எதனைச் சிந்தித்தாரோ, எதனை யோசித்தாரோ அதற்கு உயிர்கொடுக்கவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.
Any terrorists wants to kill any politicians in the world, its not surprise, May be this was drama.. but they tried to kill Former Prez. Chandrika...
ReplyDeleteDont dig the mud again and again
ARS 100% Right.
ReplyDeleteDon't try to make US FOOL by writing/thinking in this way.