Header Ads



தலைமைப் பதவியினை, சஜித் ஏற்றுக்கொள்வார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியினை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொள்வார் என முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் நாட்டின் தலைவராகவும் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.

திஸ்ஸமகாராமையில் இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான நீதிக்கான யாத்திரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “மைத்திரிபால சிறிசேனவின் கனவையும், மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பையும் ஐக்கிய தேசியக் கட்சி முறியடிக்கும்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.