இது ஒரு அற்புதமான, உண்மையான காதல் கதை (படம் இணைப்பு)
-Syed Ali-
2000ஆம் ஆண்டு வெளியான நோக்கியா 3310 மாடல் மொபைல் ஃபோன் இப்போது கிடைத்து என்ன பயன்...?
பிரத்யேகமாக அதில் ஒரு விசேஷமும் கிடையாது.
ஆனால், காஸாவில் இமாத் அல் ஸஃப்தாவிக்கு இது வெறும் ஒரு மொபைல் ஃபோன் அல்ல.
தனது பிரியத்திற்குரிய மனைவி மீதான அன்பின் சின்னமாகும்.
காஸாவில் தனது மனைவிக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக துபாயில் இருந்து 2000 ஆம் ஆண்டு வாங்கிய அந்த ஃபோனை, தனது மனைவிக்கு வழங்கும் நாளை எதிர்பார்த்து கடந்த 18 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் காத்திருந்தார் ஸஃப்தாவி.
அவ்வாறு நீண்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ஸஃப்தாவி சிறையிலிருந்து விடுதலையானார்.
அவருடன் அவரது மொபைல் ஃபோனுக்கும் விடுதலை கிடைத்தது.
இன்றும் அந்த மொபைல் ஃபோனை அரிய பொருளாக பாதுகாத்து வந்த ஸஃப்தாவி, அதனை தனது மனைவிக்கு வழங்கியபோது மகிழ்ச்சியும், கவலையும் நிறைந்த பரவசத்தில் இருவரும் ஆழ்ந்தனர்.
2000-ஆம் ஆண்டு துபாயிலிருந்து காஸாவிற்கு திரும்பும்போது ரஃபா எல்லையில் வைத்து ஸஃப்தாவியை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்து சிறையிலடைத்தது.
அவரிடமிருந்த பொருட்களையும் ராணுவம் கைப்பற்றியது.
ஒரு நாள் தனது மனைவிக்காக வாங்கிய பரிசினை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் சிறையில் நாட்களை கழித்தார் அவர்.
கடந்த 2018.12.12-ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார்.
அவரிடமிருந்து கைப்பற்றிய பொருட்களை சிறை அதிகாரிகள் திருப்பி அளித்தனர்.
தனது அம்மாவுக்கு, தந்தை வழங்கிய பரிசினை மகள் தான் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஇதனை அற்புதமான உண்மையான காதல் கதை என்று சொல்வதை விட, ஆயிஷா (ரலி) - முஹம்மது (ஸல்) காதல் கதையை அப்படி சொல்வதுதான் சிறந்தது. அது அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்டு, வஹி மூலம் அறிவிக்கப்பட்டது.
எங்கும், எதிலும், எப்போதும் விதண்டாவாதம்...
ReplyDelete