முஸ்லிம்களுக்கான விஷேட அறிவித்தல்
நேற்றிரவும் கடுகன்னாவை மற்றும் ஹிங்குல பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் புத்தர் சிலைகள் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளன. தற்போது அந்தப் பிரதேசம் முழுவதும் விசேட அதிரப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் பின்னனியில் மாவனல்லை பிரதேசத்தின் சில முஸ்லிம் இளைஞர்கள் இருப்பதாகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன
இப்பிரதேசங்களில் தற்போது சற்று பதற்ற நிலை காணப்படுவதனால் அவதானமாக நடந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர் *விசேடமாக இன்றைய தினங்களில் பெண்கள் இப்பிரதேசங்களில் பயணங்களை தவிர்த்துக்கொள்வது * சிறந்தது எனவும் அறிவிறுத்தப்படுகின்றனர்.
இதே போன்று கடந்த வாரமும் முஸ்லிம்கள் சம்பந்தமில்லாத சிங்கள பகுதிகளிலும் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என்ற யூகமே பொலிஸாரின் அனுமானமாகவிருக்கிறது.
தற்போதைய ஹிங்குல கனெதன்ன, மற்றும் தெல்கஹகொட பிரதேசச மக்கள் அவதானமாக இருப்பதோடு, சமூக நல சங்கங்கள், பள்ளி நிர்வாகங்கள் இச்சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அவசரமாகவும் அவசியமாகவும் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி சமூகத்தை வழி நடாத்த கடமைப்பட்டுள்ளனர்.
களத்திலிருந்து வரும் செய்திகளின் அடிப்படையில் நோக்கும்போது பதற்றம் நிலவுவதாகவும், விஷேட அதிரடிப்படையினர், மற்றும் பொலிஸார் குறிப்பிட்ட பிரதேசங்களில் பதுகாப்பளிப்பதோடு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
இது அரசியல் மாற்றத்தின் பின்னனியில் அமைந்த சதியாகவே நோக்கப்படுகிறது. கடந்தவார அரசியல் மாற்றம் சில இனவாதிகளை உளரீதியாக பாதித்துள்ளதோடு அவர்களின் பின்னனியில் பதவியிழந்தவர்கள் சம்பந்ப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளதாகவே அறிய முடிகிறது.
பதவியிழப்பால் பல எதிர்பார்புகளோடு இருந்த மாவனல்லை பகுதி அரசியல்வாதிகள் இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முனைவதாகவே அப்பகுதி மக்களினதும் பிரதேச ஏனைய அரசியல் வாதிகளினதும் அவதானம்.
இப்பகுதி மற்றும் சூழவுள்ள மாவனல்லை பகுதி முஸ்லீம்கள் அவதானமாகவும் நிதானமாகவும் நடந்து கெ்ள்ளவது முக்கியமாகும்.
மாவனல்லை போன்ற முஸ்லிம்கள் செரிந்து வாழும் பகுதிகளில் இனவன் செயல்களை ஆரம்ப்பிப்பதன் மூலம் அரசியல் ரீதியாக உளவியல்தாக்கத்திற்கு உட்பட்டோர் நாடு முழுவதும் முஸலிம்களுக்கு எதிரான வன்செயலை தூண்டி ஸ்தீரமற்ற நிலையொன்றை உருவாக்கவே இவ்வாறான ஒத்தகைகள் பார்க்கப்படுகின்றன.
அவரகளும் வாழ மாட்டார்கள். அயலவர்களையும் வாழவிடமாட்டார்கள். மக்களன் நல்லவர்கள்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் மக்களிடையே புல்லுருவிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மறைக்க அல்லது மறுக்க முடியாத உண்மை.
ReplyDelete