Header Ads



எப்படியாவது இந்த, அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் - எஸ்.பி.

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை கவிழ்த்து, புதிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தலில் அல்லது வேறு விதமாகவோ அரசாங்கத்தை கவிழ்க்க போவதாகவும் துரிதமாக தேர்தலை நடத்த யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை நேசிக்கும் தேசப்பற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இந்த யோசனைக்கு ஆதரவளிப்பார்கள். உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படாவிட்டால், எப்படியாவது அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசாங்கத்தை அமைக்க எனது அணி தயாராக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும். இடைக்கால கணக்கு அறிக்கைக்கு 103 வாக்குகள் கிடைத்தன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பதை காணமுடிந்தது எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. First you must be chased out of parliament.People rejected him my three brought him through backdoor

    ReplyDelete
  2. Hello don't you have any other work.You are rejected by the people.You are the person that tried to turn the art student who enter university,to come out as science graduate.You are such a joker.As same as your government minister Piyasena Gamage tried to do same thing, bring in a motion to change the technical college to technology college shows how fools are you all.It show how ignorant are you all.Hw such a people going to develop the country?

    Yes you all knows how to destabilize the country and how to topple the government.

    ReplyDelete

Powered by Blogger.