Header Ads



அக்குறணை பிரதேச சபையின், வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம் - எதிர்க் கட்சியினர் பகிஷ்கரிப்பு

   (மொஹொமட்  ஆஸிக்)​​

அக்குறணை பிரதேச சபையின் 2019 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று 11 ம் திகதி மாலை எதிர்கட்சியினரின் சபை பகிஷ்கரிப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பின்றி நிறை வேற்றப்பட்டது.
இன்று 11 ம் திகதி  12 மணி அளவில் இடம்பெற்ற விஷேட பொதுக் கூட்டத்திற்கு அதன் தலைவர் ஐ.எம். இஸ்திஹார்  அவர்கள் 2019 ம்  ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார். 

இவ் விஷேட பொதுக் கூட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்நத் மூன்று உறுப்பினர்களும் விஷேட  சபைக் கூட்டத்திற்கு சமூகம் தந்திருக்க வில்லை.  2019 ம் ஆண்டு வரவு செலவுத திட்டத்தை முன்வைத்த உரையாற்றிய  தலைவர் ஐ.எம். இஸ்திஹார் , அக்குறணை பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கத்துடன்  இவ் வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுளதாக தெரிவித்தார்.
இங்கு  முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியைச் சேர்ந்த ஏ.எம்.எம். சிம்சான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அக்குறணை பிரதேச சபை வரலாற்றில் இது வரை வரவு செலவுத திட்டத்திற்கு வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்பட்ட தில்லை என்றும் இம்முறையும் அவ்வாறு வாக்கெடுப்பின்றி நிறை வேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். 

அக்குறணை  பிரதேச சபையில் 30 அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன்  ஆளும் கட்சியில் 15 அங்கத்தவர்களும் எதிர் கட்சியில் 15 அங்கத்தவர்களும் அங்கம் வகிக்கின்றனர். 

இன்று இடம் பெற்ற விஷேட பொதுக் கூட்டத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியைசேர்ந்த 12 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் சமூகமளிக்க வில்லை.

இது தொடர்பில்  எதிர் கட்சி தலைவர் அஜ்மீர்  பாரூக் அவர்களிடம் வினவிய போது, இம்முறை வரவு செலவுத திட்டம் முறையாக முன்வைக்கபட வில்லை என்றும் இன்று 11 ம் திகதி காலையிலேயே வரவு செலவுத்திட்டம் தமக்கு கிடைத்ததாகவும்  இவ்வாரான முறைகேடுகளை  எதிர்த்து எதிர் கட்சியினர் விஷேட சபைக் கூட்டத்தை  பகிஷ்கரிக்க தீர்மானித்ததாகவும் தெரிவித்தார்.

அகில் இலங்கை மக்கள காங்கிரஸின் உறுப்பினர் எஸ்.எச்.எம்.  நஸார் கருத்து தெரிவிக்கையில்  வரவு செலவுத் திட்டம் முறையாக முன்வைக்கப்பட வில்லை என்றும் இன்று காலையிலே தம்மிடம் வழங்கப்பட்டதாகவும் அதனை வாசிப்பதற்காவது நேரம் இல்லை  இன்பதால்  கூட்டத்தை பகிஷ்கரிக்க தீர்மானித்தாக தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த என்.ஜெயசீலன் தெரிவிக்கையில் வரவு செலவுத்திட்டம் முறையாக முன்வைக்கப்படததைத் தவிர அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்க வில்லை என்றும் தெரிவித்தார்.

எவ்வாறு இருந்த போதும் இக் கூட்டத்திற்கு சமூகம் தந்த 15 உறுப்பினர்களுள் எவரும் எதிர்ப்பு இல்லாத தால் இவ் வரவு செலவுத் திட்டம்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அதன் படி எதிர்பார்க்கப்படும் முழு வருட வருமானம் 8, 30, 01, 527.00 ஆகும்.மொத்தசெலவீனம்  7,71,42,484.48 ஆகும்.

No comments

Powered by Blogger.