Header Ads



றிசாத்தும், ஹக்கீமும் என்ன சொல்கிறார்கள்...??

"சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது" மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார்.

நாட்டில் எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்புக்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி செயற்பட தொடங்கியதிலிருந்து,  அது பிழையென நிரூபிக்கும் வகையில், நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. சட்டம் தனது கடமையை மிகச் சரியாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

கடந்த நவம்பர். 12ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக வழங்கிய இடைக்கால தடையுத்தரவு மூலம் ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு ஓரளவு நிவாரணமும் நிம்மதியும் கிடைத்தது.  அதன் தொடர்ச்சியாக இன்றைய சரித்திரம் வாய்ந்த தீர்ப்பானது ஜனநாயகத்திற்கான பூரண வெற்றியெனவே நாம் கருதுகின்றோம். நீதிமன்றத்தில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஜனநாயக வெற்றிக்காகவும் நீதிக்காவும் போராடியது. அந்த வகையில் அரசியலமைப்புச் சட்டமானது நீதிமன்றத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு கிடைத்துள்ளதாகவே நாம் உறுதியாக நம்புகின்றோம். 

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இனியும் காலம் தாழ்த்தாது ஐ.தே. கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கி, ஒக்டோபர். 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையை உருவாக்கி தற்போதைய அரசியல் நெருக்கடிக்கும் உடனடியாக தீர்வை காண வேண்டும்.  

ஜனநாயகத்தை வெற்றிகொள்வதற்கான இந்த போராட்டத்திற்கு ஒத்துழைத்தவர்களுக்கும், எமது வேண்டுகோளை ஏற்று இறை பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கின்றேன்.

2

ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்புக்கு செவிசாய்ந்து ரணிலை பிரதமராக நியமிப்பார்: ரவூப் ஹக்கீம்

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தலைசாய்த்து, ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை இன்றிரவே பிரதமராக நியமிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக இன்று (13) தீர்ப்பு வழங்கிய பின்னர், உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். ரணில் விக்கிரசிங்கவுக்கு பிரதமர் பதவியை கொடுக்க முடியாது என்று ஜனாதிபதி கூறுவதானது, அது அவருக்கே கொடுக்கப்படும் என்பதாக பார்க்கப்பட வேண்டும். இதற்கு முன்னரும் அப்படித்தான் நடந்துள்ளது.

அரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்பதை உயர் நீதிமன்றத்தில் ஏழு நீதியரசர்களும் தங்களுடைய தீர்மானத்தை அறிவித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும், நீதிக்கும் இன்று பாரிய வெற்றி கிடைத்துள்ளது. நீதித்துறை நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது.

அடுத்த கட்டமாக புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் இடைக்கால வரவு, செலவுத் திட்டத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வோம். இன்று பிற்பகல் 2 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் ஜனாதிபதி எங்களை சந்திக்கவிருப்பதாக மூன்றாம் தரப்பினூடாக கேள்விப்பட்டோம். இன்று அதற்கான வாய்ப்பிருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை விசாரிக்கும் நீதிபதிகள் தொடர்பில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இதுதொடர்பில் நாங்கள் மீளாய்வு மனுவொன்றை கையளிக்கவுள்ளோம்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

4 comments:

  1. இவர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியையும் ரணிலையும் பாதுகாப்பதட்காக மிகவும் போராட்டம் செய்கின்றார்கள் . முஸ்லீம் சமூகத்தின் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் இந்த போராட்ட குணம் புஷ்வானமாக காணப்படுகின்றது .

    ReplyDelete
  2. Noor: First of all, we need to stop calling someone Munaafiq. Secondly,honesty and non deception cannot mix with MR. Thirdly, rather deviding further, why don't we think about the unification of these parties??

    ReplyDelete
  3. Sahul Carder,
    I respect your opinion/comment. I have no other Islamic term to address our deceptive Muslim political party leaders and some of the hoodwinking Muslim MP's. Your 2nd., suggestion has no meaning please and I wish not to comment on that. Unification of these parties? YES,Insha Allah. I have strongly suggested that im most of my comments please. I have written nearly 900 rebuttals and comments in the Social Media and internet newspaper on such issues. It has contributed very much to a greater change in the political motion change that we should be a "POLITICAL FORCE" in the political playground of Sri Lanka, Insha Allah, Alhamdulillah.
    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  4. தன்னுடைய சொந்த அரசியலுக்காக அல்லாமல், சமுதாயத்துக்காக இவர்கள் இருவரும் எத்தனை தடவை நீதிமன்றம் சென்றிருக்கின்றார்கள் என்பதை அவர்கள சொல்லட்டும்!
    ஜனநாயத்தைப் பாதுகாப்பதற்காக இவர்கள் இருவரும் செயற்பட்டதை விடவும் கூடுதலான கரிசனையுடன் முஸ்லிம்கள் விடயத்தில் இவர்கள் இனிமேலாவது செயற்படட்டும்!

    ReplyDelete

Powered by Blogger.