Header Ads



பதவி விலகத் தயாரான மகிந்த, தடுத்து நிறுத்தப்பட்டார்

மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அவரது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் பிரசாரக் குழுக் கூட்டத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என மகிந்த கூறியுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும வெளியிட்ட தகவல்களுக்கு அமையவே மகிந்த ராஜபக்ச தாம் பதவி விலக தயார் எனக் கூறியதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 13ஆம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி நடத்தவிருந்த மக்கள் அதிகார எதிர்ப்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டிருப்பதை டளஸ் அழகப்பெரும் அறிந்திருக்கவில்லை.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் மூலம் கொழும்பு காலிமுகத்திடத்திலும் பெரும் எண்ணிக்கையில் மக்களை கூட்டி சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் 12ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை கூடியிருக்கும் மக்கள் மத்தியில் ரணில் விக்ரமசிங்க வாசிக்க உள்ளதாகவும் அதன் பின்னர், ஜனாதிபதி மாளிகை அல்லது ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்படலாம் என தனக்கு தெரியவந்துள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதமாக இருக்காது என்ற நிலைப்பாட்டில் அழகப்பெரும கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னர், சிவில் பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்படும் எனவும் அது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் எந்த சம்பவங்கள் நடந்தாலும் அதற்கான பொறுப்புக் கூற வேண்டிய பங்கு மகிந்த ராஜபக்ச உட்பட தமது தரப்பையும் சாரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச, தற்போது தான் வெறுமனே விமர்சிக்கப்பட்டு வருவதாகவும் இதனால், நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறிசேனவின் வர்த்தமானிக்கு எதிராக கிடைத்தால், தான் அந்த சந்தர்ப்பத்திலேயே பதவியை ராஜினாமா செய்வது முக்கியமானது எனக் கூறியுள்ளார்.

அப்போது குறுகிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, “ நீங்கள பதவி விலக வேண்டாம் அப்படி செய்தால், ஜனாதிபதி தனித்து போவார். அப்படி செய்வது தவறு. நாம் எப்படியாவது அரசாங்கத்தை பிடித்துக்கொண்டு இருப்போம்” என தெரிவித்து்ளளார்.

சுமதிபாலவின் கருத்தை ஆமோதித்து பேசிய விமல் வீரவங்ச, “பெற்றுக்கொண்ட அதிகாரத்தை கைவிடுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

முடிந்தளவு கூடிய அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்கத்தை தக்கவைக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட ஜனாதிபதிக்கு முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. நாடு எப்படிப் போனாலும் பரவவில்ல என்று நினைக்கும் கேடுகெட்ட கூட்டம்

    ReplyDelete

Powered by Blogger.