Header Ads



மகிந்த பிரதமராக இருப்பதைவிடவும், எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே பலம்

மகிந்த ராஜபக்ச பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலம் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து தேர்தலை சந்திக்கும் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஜனாதிபித மைத்திரி எதிர்க் கட்சித் தலைவராக தற்போது இருக்கும் மகிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்றார்.

இதேவேளை, மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ரணில் விக்ரமசிங்க தீர்த்து வைக்க மாட்டார். அவருக்கு சாதாரண மக்களின் நிலைமைகள் என்னவென்பது தெரியாது.

அதேபோல் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகளை தோட்டத்தொழிலாளர் பிரச்சினைகள் அனைத்தையும் அடுத்து அமையும் எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும் என்றார்.

3 comments:

  1. Then why you did not do it earlier while all of you on POWER UNDER Mr. Mahinda's regiment? Again and again you all Dirty Criminals trying to make Sri Lankans fool..

    ReplyDelete
  2. ayyo...ayyyo....sariyaana joke onnu sollittinga...etho unga ullam happy so happy

    ReplyDelete
  3. மீசைஇல் மண் தொடவில்லை

    ReplyDelete

Powered by Blogger.