Header Ads



இலங்கை தற்போது பிரச்சினையை எதிர்கொள்கிறது, இது சீனாவின் கடன் பளு தொடர்பான பிரதிபலிப்பே

இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுக விடயத்தில் தமது இறைமையை அடகுவைக்க பலவந்தப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடன்பொறி மூலமே சீனா இதனை பெற்றுக்கொண்டுள்ளது. எனவே சீனா, தமது கடன்பொறித்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அமரிக்கா கோரியுள்ளது.

அமரிக்காவின் பிரபல காங்கிரஸ் சட்டவாக்குனரும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு உபக்குழுவின் தலைவருமான, டனா ரொஹ்ராபெச்சர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

சீனாவைப் பொறுத்தவரையில் அது, சிறிய நாடுகளின் அடித்தள கட்டமைப்புக்கு அதிக வட்டியில் நிதியளிப்பதன் காரணமாக வறுமையான நாடுகள், அவற்றை மீளச்செலுத்துவதில் பிரச்சினையை எதிர்கொள்கின்றன.

இந்த நிலையில் வறுமையான நாடுகள், தாம் பெற்றக்கடன்களை மீளசெலுத்த முடியாதபோது சீனா, அந்த நாடுகளின் சொத்துக்களை நேரடியாக கையகப்படுத்துகிறது.

இதன் முக்கிய கட்டமே ஹம்பாந்தோட்டை துறைமுக கையக்கப்படுத்தல் நடவடிக்கையாகும் என்று அமரிக்காவின் பிரபல காங்கிரஸ் சட்டவாக்குனரும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கான வெளியுறவு உபக்குழுவின் தலைவருமான, டனா ரொஹ்ராபெச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை சீனா நிறுத்திக்கொள்ளவேண்டும். இலங்கையை பொறுத்தவைரையில் தற்போது அரசியலமைப்பு பிரச்சினையை எதிர்கொள்கிறது.

இதுவும் சீனாவின் கடன் பளு தொடர்பான பிரதிபலிப்பே என்று டனா ரொஹ்ராபெச்சர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Ajan,during the last year's budget, each and every TNA mp was paid a big amount of money by the government to vote in favour of the budget. One of the TNA MPs admitted it during his public address. Is it 20%?. Learn mathematics from grade one.

    ReplyDelete
  2. @Lareef, yes Tna did it in your dreams.

    What ever....Muslims are voting for Corrupted politicians only...why?

    ReplyDelete
  3. அண்ணன் அஜன்,

    நீங்கள் தவறாக கணித்துள்ளீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் என்றுமே உத்தம புத்திரர்கள், கறைபடியாத கரங்களை கொண்டவர்கள், தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அப்பேற்பட்ட மனிதகுல மாணிக்கங்களை மேற்படி பட்டியலில் இணைத்துள்ளது கவலையளிக்கிறது.

    சரி, அண்ணே, ட்ரீட்மெண்ட் எல்லாம் நடக்குதா?இப்ப அண்ணனுக்கு நெஞ்சு எரிச்சல், வயித்தெரிச்சலும் கொஞ்சம் கூடியிருக்காக்கும். ஈனோ நல்லது அண்ணே... மறக்காம மருந்து மாத்திரைகளை நேரந்தவறாம போடுங்கோ அண்ணே..

    ReplyDelete

Powered by Blogger.