பாராளுமன்றம் கூடியது, இடைக்கால பட்ஜட் சமர்ப்பிப்பு, எதிர்க்கட்சித் தலைவரை அறிவிப்பதில் தாமதம்
புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
அத்துடன் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2
எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து இடைநிறுத்திவைக்குமாறும், மேற்படி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கவேண்டுமென கோரி, கையளிக்கப்பட்ட யோசனை தொடர்பில் எனது தீர்மானம், தாமதமாகும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.
Post a Comment