மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிரான, மனு ஜனவரியில் விசாரணை
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஜனவரி 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் அந்த மனுவை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
Post a Comment