Header Ads



மௌனியாக இருப்பதற்கே சம்பந்தனுக்கு, எதிர்கட்சி பதவி வழங்கப்பட்டிருக்கின்றது

வாய்மூடி மௌனியாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித்தலைவர் விடயம் தொடர்பாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோது,

தெற்கில் இந்த 50 நாட்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் போட்டியானது தென் பகுதியினுடைய ஒரு அதிகாரப்போட்டி. இந்த அதிகாரப் போட்டியில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களினுடைய கோரிக்கைகளை முன்னிறுத்தாமல் வெறுமனமே ஜனநாயக உரிமை மீறப்பட்டிருக்கின்றது.

அரசியலமைப்பு மீறப்பட்டிருக்கின்றது, இந்த இடத்தில் இவர்கள் ஒரு நிபந்தனையற்ற ஆதரவிற்குப் போயிருக்கின்றார்கள். இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய பதவிக்காக தனிய நின்று தான் போராடுகின்ற ஒரு நிலைமை துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

எங்களைப் பொறுத்தவரையில் எதிர்கட்சித்தலைவர் என்பது இந்த நாட்டிலே ஜனாதிபதி பிரதமர் அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்றதுதான் இந்த எதிர்க்கட்சித்தலைவர் இந்த மூன்றரை வருடம் எதிர்க்கட்சித்தலைவர் என்கின்ற பதவியை வைத்துக்கொண்டு பத்துவருடமாக காணாமல் போனவர்கள் கையளிக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் அல்லது இல்லை என்ற ஒரு பதிலைப் பெற்றுக்கொடுக்க முடியாதளவிற்குத்தான் இந்த நாட்டினுடைய எதிர்க்கட்சித்தலைவர்.

எதிர்க்கட்சித்தலைவர் என்பவர் தமிழ் மக்களுடைய பிரச்சினையை ஜ.நா மனித உரிமைப் பேரவைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக வாய்மூடி மௌனியாக இருப்பதற்காகத்தான் எதிர்கட்சித்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை. இவ்வாறு இன்று வவுனியா வன்னி இன் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.