Header Ads



நிதானமாக செயற்பட கோரிக்கை - முஸ்லிம் கவுன்சிலும் களத்தில்

மாவனெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் முஸ்லிம் கவுன்சிலும் தனது கவனத்தை குவித்துள்ளது.

அதன் தலைவர் என்.எம். அமீன் இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மாவனெல்லை பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ஆராய்ந்துள்ளதுடன், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இன்று -26- காலையிலிருந்து பிரமுகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாக சுட்டிக்காட்டிய அமீன், பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்ட சகல தரப்புகளுடன் இணைந்து கபீர் காசிம் மேற்கொண்ட துரித பணியை பாராட்டி பேசினார்.

அத்துடன் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின்  முன்னாள் தலைவர்  ஹஜ்ஜுல் அக்பர் விசாரணைக்காக காவல்துறைக்கு வருவதாக கூறியும், அவரை வீட்டிற்கு போய் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்றமையும், விசாரணைக்காக அவர் காத்திருந்தமையும் ஏனைய மக்களிடத்தில் மாற்று அபிப்பிராயங்கள் ஏற்பட வழிவகுத்துவிடக் கூடாதென்பதற்காக முஸ்லிம் பிரமுகர்களிடம் ஹஜ்ஜுல் அக்பரின் துரிதமாக வாக்குமூலம் பெற்று அவரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அமீன் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இப்படியான ஒரு நிலையில், நமது சமூகம் மிகவும் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுவது கட்டாயமானது எனவும் அமீன் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.