Header Ads



சதகத்துல்லாஹ் மௌலவி மரணம் - ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

நேற்று (வியாழக்கிழமை இரவு) வபாத்தான அஷ்ஷைக் ஏ.ஸி.எம். சதகத்துல்லாஹ் நத்வி அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலைப்படுகிறோம். அன்னார் கண்டி மாநகர ஜம்இய்யத்துல் உலமா கிளையின் உறுப்பினராக இருந்ததோடு அதன் உப தலைவர்களில் ஒருவராகவும் இருந்து ஜம்இய்யாவின் வளர்ச்சிக்காக உழைத்தார்கள். சிங்கள மொழியில் குத்பாப் பிரசங்கங்கள் செய்து வந்த அவர்கள் ஒரு காழி நீதவானாகவும் பணி புரிந்தார்கள். மேலும், கண்டியில் உள்ள சர்வ சமய ஒன்றியத்திலும் ஒரு உறுப்பினராக இருந்து இனங்கள் மத்தியில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்க பாடுபட்டார்கள்.

அன்னார் கண்டி வன்செயல் காலத்தில் தாக்கப்பட்டது மிகவும் வருத்தத்தை தருகிறது. அதனை சகித்து பொறுத்து அன்னாருக்குத் தேவையான வைத்திய தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த அன்னாரது குடும்பத்தினர் அவரது வபாத் காரணமாக மிகவும் துக்கத்திலும் சஞ்சலத்திலும் இருக்கும் இந்நேரத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவர்களோடு பங்கு கொள்வதோடு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அன்னாரது பாவங்களை மன்னித்து அவர்களது நற்கிரியைகளை அங்கீகரிக்க பிரார்த்திக்கின்றோம்.

அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் பஹ்ஜி
செயலாளர் ஆலிம்கள் விவகாரப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

1 comment:

  1. Actually our Muslim leaders from every sectors should bear the responsibility for not giving proper support for his family when he was at the hospital under treatment.

    ReplyDelete

Powered by Blogger.