துருக்கி அதிபர் கொடுங்கோலன்போல, என்னை தினசரி தொல்லைக்கு உட்படுத்துகிறார் - பென்ஜமின் நெத்தன்யாகு
துருக்கி அதிபர் எர்டோகன் கொடுங்கோலன் போல் தன்னை தினசரி தொல்லைக்கு உட்படுத்துவதாக இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு கதறல்
ஆக்கிரமிப்புப் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாகு தினசரி துருக்கி அதிபர் எர்டோகனால் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாவும், இது அவரது யூதர்களுக்கு எதிரான துரோகம் என்று அவர் கதறினார்
துருக்கி, நாளுக்கு நாள் சர்வாதிகாரமாக ஆகிவருகிறது என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் இஸ்ரேல் மீது ஒரு சிற்றறிவைக் கொண்டுள்ளார் என நெத்தன்யாகு ஹீப்ரு சேனல் 14 க்கான நேர்காணலில் தன் கவலைகளை வெளியிட்டார்
சென்ற ஞாயிறன்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் டெய்யிப் எர்டோகன் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகுவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் இஸ்ரேல் தவறான கதவுகளை தட்டுகிறது என இஸ்ரேல் மீது கடும் எச்சரிக்கையுடன் பேசியிருந்தார்
துருக்கிய அனட்டோலியா செய்தி நிறுவனம் நெத்தன்யாகுவிற்கு எர்டோகனின் ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்திருந்து அதில் இஸ்ரேல் தவறான கதவை தட்டுகிறது எனவும், எர்டோகன் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகும் எனவும் ஆனால் நீங்கள் (நெத்தன்யாகு) பயங்கரவாதத்தின் குரல் என குறிப்பிடப்பட்டிருந்தது
தொடர்ந்து அதன் பாலஸ்தீன் மக்களின் மீதான குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் எனவும் மற்றும் படுகொலைகள் அழிவு ஆகியவற்றிற்கு இஸ்ரேல் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அதை நிராகரிப்பு செய்யவோ நியாயபடுத்தவோ எந்தவொரு இஸ்ரேலிய கட்சிக்கும் அதன் எந்தவொரு தரப்பிற்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது
துருக்கியின் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் தலைவன் நெத்தன்யாகு தனது நாட்டில் தொடரும் பாலஸ்தீன் மக்களின் மீதான சர்வதேச குற்ற வழக்குகளிலிருந்து சர்வதேசத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார் ஆனால் அவரது முயற்சிகள் வெற்றி பெறாது என அவரது ட்விட்டர் கணக்கில்குறிப்பெழுதி இருந்தார்
நெத்தன்யாகு இஸ்ரேலில் நடைமுறைப்படுத்திய அநீதி மற்றும் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை மூடிமறைப்பதில் வெற்றிபெற மாட்டார் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்
இஸ்ரேலியர்கள் ஜனாதிபதி எர்டோகனை ஒரு போதும் மெளனிக்க முடியாது என ஒரு துருக்கிய ஜனாதிபதி செய்தி தொடர்பாளரும் கூறினார்
ஆதாரம்: இஸ்ரேலிய செய்தி ஊடகம்
Mohamed Jawzan
Mohamed Jawzan
But Turkey has Embassy in Israel Why?
ReplyDeleteNot Trukey only have diplomatic relations with Israel but they're Egypt and others already Embassy in Israel..
ReplyDeletenot Turkey only have Embassy dear there Egypt and others already have relationship.
ReplyDeleteMy dear brother the Turkey is not Only have Embassy in Israel but already the Arabic countries has diplomatic tealeation with Israel.
ReplyDelete