அமெரிக்கத் தூதுவருக்கு தவறான, தகவல்களை யாரோ வழங்கியிருக்கின்றார்கள் - பந்துல
நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கல் நிலையின் காரணமாக நாடு பாரிய சீர்குலைவினை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனை விரைந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
உண்மை என்னவெனில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியமையை புரிந்து கொண்டதாலேயே, அந்நிலையினை சீரமைப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவ்விடயத்தில் அமெரிக்கத் தூதுவருக்கு தவறான தகவல்களை யாரோ வழங்கியிருக்கின்றார்கள் என்றே எண்ணவேண்டியுள்ளது. எனவே அவர் தன்னுடைய கருத்தினை சரிசெய்து கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாடா கலாசார நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையின் காரணமாக நாடு சீர்குலைவினை நோக்கிப் பயணிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.
எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக, அதனை சீர்செய்யும் நோக்கிலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எனவே இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்கு யாரோ தவறான தகவல்களை வழங்கியுள்ளார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. ஆகவே அவர் தனது கருத்தினை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நீங்கள் சரியான செய்தியை அனுப்பி அவர்களுக்கு தெளிவு படுத்துங்கள்.
ReplyDelete