மைத்திரியா..? ரணிலா..?? சூதாட்டத்தில் ஈடுபடும் மக்கள் -
ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் இன்று -13- தீர்ப்பு வழங்கவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று காலை அறிவித்திருந்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பினரும் இறுதித் தீர்ப்பு குறித்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து அரசியல்வாதிகளை விடவும் நாட்டு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இன்றைய தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்பது தொடர்பில், பொது மக்கள் பந்தயம் கட்ட ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய சமூகத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் பல தொகைக்கு பந்தயம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமான தீர்ப்பு அமையும் என ஒரு பகுதியினரும், பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என பகுதியினரும் பந்தயம் கட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான மோசமான சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குதிரைகளை வைத்துத்தான் பொதுவாக சூதாடுவார்கள், எப்பொழுதில் இருந்து கழுதைகளை வைத்து சூதாட ஆரம்பித்தார்கள்?
ReplyDeletewell said Ameer
ReplyDeleteit is true Ameer, difference thinking ................
ReplyDelete