மாவனெல்லையில் பாதுகாப்பு - வணக்கத் தளங்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறார் கபீர்
மாவனெல்லை பகுதியில் நேற்று முன் தினம் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெரும்பான்மையினத்தவர்கள், சிறுபான்மை இன ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைக்கப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாலை நான்கு மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை (அஸ்பர் என்பவரை) பிரதேச வாசிகள் பிடித்த போது ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் மற்றவரை அப்பிரதேச வாசிகள் பொலிசில் ஒப்படைத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கள ஊடக செய்திகள் அவ்வாறு குறிப்பிட்டுள்ள போதும்,
குறித்த வாலிபர்கள் அதிகாலை நான்கு மணியளவில் அவ்வழியாக வெலம்படை நோக்கி சென்றதாக அவர்கள் கூறியுள்ளதாகவும் தங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மாவனல்லை ரன்திவல,மகதேகம ஆகிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இரு புத்தர் சிலைகளே விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்தன. மாவனல்லையை அண்மித்த சில இடங்களில் விசேட அதிரடிப்படை பந்தோபஸ்து போடப்பட்டு உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.
2
"மாவனல்லையில் இடம்பெற்ற வணக்க வழிபாட்டு தளங்களுக்கு எதிரான வன்முறைகளை நான் கண்டிக்கிறேன். என அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்ட உடனே நான் இது சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்கவும், கைது செய்யவும் போலீசைக் கட்டளையிட்டேன்.
மேலும் கைதாகி உள்ள இரண்டு சந்தேக நபர்களும் அதிகாரிகளால் சட்டத்தின் முழு அளவிற்கு உட்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment