Header Ads



ஜனாதிபதியின் கையால், விருதைப் பெறமாட்டேன் என அறிவித்த கலைஞர் - விழா ஒத்திவைப்பு


பிரபல மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி என்பவர் தனக்கு ஜனாதிபதி கையால் வழங்கப்படவிருந்த விருதொன்றை வாங்க மறுப்புத்  தெரிவித்து இது தொடர்பில் பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டுக்குரிய கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் மூத்த கலைஞரான ஜயசிறிக்கும் கலாபூஷண விருது கிடைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கலாசார திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த விருது விழாவில் பற்கேற்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி கையால் விருதைப் பெற மாட்டேன் என்றும் டப்ளிவ் ஜயசிறி தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூஷணம் விருது  விழா திகதி குறிப்பிடப்படமால் ஒத்திவைக்கப்படுவதாக, கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விருது விழா தாமரைத்தடாகத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் கையால் விருது வாங்கமாட்டேன் என மூத்த கலைஞரான டபிளிவ் ஜயசிறி என்பவர் தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, இந்த விருது ஒத்திவைக்கப்படுவதாக கலாசார நடவடிக்கைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.