Header Ads



ஜனாதிபதி சரியான நேரத்தில், கட்சி தாவியவர்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான நேரத்தில் கட்சி தாவியவர்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் அக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அரசியல் மாற்றத்தின் பின்னர் சொந்தக் கட்சியிலிருந்து அமைச்சுப் பதவிக்காக ஓடிச் சென்றவர்களுக்கு ஜனாதிபதி சரியான பாடத்தை கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் கட்சி தாவிய அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகட்டிய பாடத்துக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சுப் பதவியை எதிர்பார்த்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதில்லையென்ற ஜனாதிபதியின் தீர்மானத்து இருந்தார்.

அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொடுத்த அமைச்சர்களின் பட்டியல் கட்சி தாவியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை ஜனாதிபி மைத்திரிபால சிறிசேன நீக்கியிருந்தார்.

இது தொடர்பாக கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அப்பாே ஐக்கியதேசிய முன்னணியிலுருந்து மகிந்த அரசுக்கு தாவியவர்களுக்கு இதே ஜனாதிபதி உடனுக்குடன் மந்திரி பதவி வழங்கினாரே இதை எப்படி நியாயப்படுத்துவது?

    ReplyDelete
  2. This is not a action.....this is just Kaju Jealous....
    Its like when he killed all the chicken around his home bcs of not getting chicken curry from his wife (Source: My grandpa book by his daughter)...

    ReplyDelete

Powered by Blogger.