Header Ads



"நாடே எதிர்பார்த்துள்ள தீர்ப்பை, அவசரமாக வெளியிடுங்கள்"

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை தாமதமின்றி வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம நீதியரசரிடம் கோரவுள்ளார்.

சட்ட மா அதிபர் ஊடாக நாளைக் காலை அவர் இந்த கோரிக்கையை விடுப்பார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -10- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

முழு நாடே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துள்ளது.

இந்த வழக்கின் சமர்ப்பனங்கள் அனைத்தும் ஏலவே நிறைவடைந்துவிட்டன.

அத்துடன் எதிர்வரும் 14ம் திகதி முதல் நீதிமன்றங்களுக்கான விடுமுறை நடைமுறைக்கு வருகிறது.

எனவே அதற்கு முன்னதாக இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்தநிலையில் நாளைக் காலை சட்ட மா அதிபர் ஊடாக ஜனாதிபதி, பிரதம நீதியரசரிடம் குறித்த வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்குமாறு கோரிக்கை முன்வைப்பார் என்று விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.