Header Ads



"கோத்தபாயவை அடுத்த, ஜனாதிபதியாக்குவதே எமது எதிர்பார்ப்பு"

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை, அடுத்த ஜனாதிபதியாக கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு என மஹிந்த தரப்பினர் அறிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவினால் மீண்டும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பபினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பதுரலிய பிரதேசம் ஒன்றில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கமைய பொதுத் தேர்தலுக்கு செல்வது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்படி செல்லவில்லை என்றால் நாட்டிற்கு எப்படியான நிலை ஒன்று ஏற்படும் என நினைத்து பார்க்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.