இலங்கையை சுனாமி தாக்கும், அச்சுறுத்தல் இல்லை - மக்கள் அச்சப்பட தேவையில்லை
இலங்கையை சுனாமி தாக்கும் அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலையில் இந்தோனேஷியாவில் பாரிய சுனாமி தாக்கம் ஏற்பட்டதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் வரை காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கையையும் சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் அடைந்திருந்தனர்.
எனினும் இலங்கைக்கு அவ்வாறான பாதிப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. இது குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என மத்திய நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment