Header Ads



மஹிந்­தவின் மேன்முறை­யீடு, நாளை பரி­சீ­ல­னை

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது நாளைய -14- தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிர­தமர் பத­வி­யிலும் அமைச்சர் பத­வி­யிலும் கட­மை­களை முன்­னெ­டுக்க தனக்கு  மேன் முறை­யீட்டு நீதி­மன்றம்  விதித்­துள்ள இடைக்­கால தடையை நடை முறைப்­ப­டுத்­து­வதை தடுக்கும் முக­மாக உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி, மஹிந்த ராஜ­பக்ஷ   தாக்கல் செய்த விஷேட மேன் முறை­யீட்டை நாளை 14 ஆம் திகதி வெள்­ளி­யன்று பரி­சீ­ல­னைக்கு எடுக்க உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது. 

அத்­துடன் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ, சமல் ராஜ­பக்ஷ , தினேஷ் குண­வர்­தன  மற்றும் விஜே­தாஸ ராஜ­பக்ஷ ஆகி­யோரும் தாம்  அமைச்சுப் பத­வி­களில் தொடர விதிக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால தடையை செயற்­ப­டுத்­து­வதை தடுக்கும் வகையில் உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி­யுள்ள விஷேட மேன் முறை­யீட்­டையும் அன்­றைய தினமே பரி­சீ­லிப்­ப­தாக உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது. 

இவ்­விரு விஷேட மேன் முறை­யீ­டு­களும் நேற்று முதல் முறை­யாக உயர் நீதி­மன்றின் 403 ஆம் விசா­ரணை அறையில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போதே பிரி­யந்த நீதி­ய­ரசர் பிரி­யந்த ஜய­வர்­தன தலை­மை­யி­லான பிர­சன்ன ஜய­வர்­தன , எல்.டி.பி. தெஹி­தெ­னிய ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழுவே இதனை அறி­வித்­தது. 

No comments

Powered by Blogger.